ஈப்போ: நவம்பர் 18-ஆம் தேதி கோல கங்சார் பள்ளியில் உயிரிழந்த மாணவர் விவகாரத்தில் குற்றச் செயல்கள் எதுவும் இல்லை என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
தைப்பிங் மருத்துவமனை பிரேதப் பரிசோதனை மற்றும் சிசிடிவி ஆய்வுகளின் அடிப்படையில் மாணவரின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பேராக் காவல்துறைத் தலைவர் தெரிவித்தார். பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உத்தரவின் பேரில் கல்வி அமைச்சு சில நிர்வாகிகளை விடுவித்துள்ளதுடன், மாணவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

